வாசகர் வட்டம் – இன்றைய கேள்வி

Artificial Intelligence

AI தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது.

தற்போது அனைத்து AI பெரிய நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து இலவசமாக வழங்கி வருகின்றன.

முதலில் ஏர்டெல்லுடன் Perplexity ஒப்பந்தம் செய்தது, தொடர்ந்து Jio நிறுவனத்துடன் Google Gemini ஒப்பந்தம் செய்தது.

இதைத்தொடர்ந்து ChatGPT அனைவருக்கும் இலவசம் என்றது.

எதனால் இலவசம்?

உலகில் இலவசம் என்ற ஒன்றே கிடையாது. இத்தளத்திலேயே பல முறை குறிப்பிட்டுள்ளேன்.

இலவசம் என்றால், அதன் பின்னே ஏதாவது ஒரு நோக்கம் இருக்கும்.

ஏதாவது ஒரு பின்னணி காரணம் இல்லாமல் நிறுவனமோ, அரசியல் கட்சிகளோ இலவசம் கொடுக்க மாட்டார்கள்.